மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்கமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
அடடா நீ ஒரு பார்வை பார்த்தால்
அழகாய் தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து என் இள மார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என் உள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமி அது சொல்லும்
மனம் ஏங்குதே மீண்டும் வாழ்க
மனம் ஏங்குதே
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என் உள்ளம் இருந்ததடி
மலை காடுங் கரும் பாறை மேலே
தலை காடும் சிறு பூவை போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடி
சட்டேன்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே
என் காதலி என் காதலி நீ வா நீ வா
என் காதலி
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்கமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடி நெஞ்சில் உன் முகம் தானடி
ஐயையோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
Friday, May 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment